ரூ2000 நோட்டுக்களை மாற்ற புதிய வழிகாட்டுதல்கள்!! உடனே மாற்றிடுங்க...

 
ரூ2000

 இன்னும் ரூ2000 நோட்டுகளை வீட்டில் வைத்திருந்தால் அவைகளை உடனே வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.  அல்லது வங்கியில் இருந்து மாற்றிக்கொள்ள இன்னும் ஒரு மாதம் மற்றும் சில நாட்கள் மட்டுமே மீதமுள்ளன. செப்டம்பர்  இறுதிக்குள் இந்த நோட்டுக்களை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு முறை அறிவுறுத்தியுள்ளது. 
இத்தகைய சூழ்நிலையில், ரூ2000  நோட்டுகளை பொறுத்தவரை  செப்டம்பர் மாதம் மிக முக்கியமான மாதமாக இருக்கப் போகிறது.   மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டை விரைவில் மாற்ற வேண்டும் அல்லது வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகள் 2,000 ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதில் தீவிர வேகத்தைக் கண்டுள்ளன. இதுவரை 35 சதவிகித 2,000 கரன்சி நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன அல்லது மக்களால் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 1.81 பில்லியன் ரூபாய் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன, இது மொத்த புழக்கத்தில் 1.3 சதவிகித அளவைக் கொண்டுள்ளது. மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 3.62 லட்சம் கோடி எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 19 அன்று, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது, புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றலாம் என்று கூறியது.

ஷேர் ஆர்பிஐ

ரூபாய் 2,000 மதிப்பிலான நோட்டுகள் சட்டப்பூர்வமான தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டு வசதியை உறுதி செய்வதற்கும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், ரூபாய் 2,000 நோட்டுகளை மற்ற மதிப்புள்ள கரன்சிகளுக்கு மாற்றுவதற்கு, எந்த வங்கியிலும் ஒரே நேரத்தில் ரூபாய் 20,000 வரையில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

மே 23 RBI சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் நவம்பர் 2016ல் 2,000 ரூபாய் நோட்டுகளை RBI அறிமுகப்படுத்தியது.  பொருளாதாரத்தின் நாணயத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மத்திய வங்கியானது ரூபாய் 10,000க்கு மிகாமல் எந்த மதிப்புடைய நோட்டுகளையும் வெளியிட அனுமதிக்கிறது.

ரூ.2000 ரூபாய்

"கரன்சி மேலாண்மை அமைப்பின்" ஒரு பகுதியாக 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி 2018-19ல் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது.

சுமார் 89 சதவிகித 2,000 நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டன, மேலும் அவற்றின் மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் முடிவடையும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது, ரூபாய் 2,000 பொதுவாக பரிவர்த்தனைகளுக்குப் பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web