வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வங்கக்கடலில் அடுத்த 72 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மியான்மர் கடற்கரையை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கிமீ மற்றும் 7.6 கிமீ உயரத்தில் உருவாகியுள்ள சூறாவளி தென்மேற்கு திசையில் சாய்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி அடுத்த 72 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய வானிலை அம்சங்கள், ஒடிசாவில் அடுத்த 5 நாட்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 2 நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக. செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 13 முதல் 17 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!