பாபர் மசூதிக்கு பதில் புதிய மசூதி... அடிக்கல் நாட்டும் மெக்கா இமாம்...!

 
பாபர் மசூதி

உத்தரப்பிரதேச மாநிலம்  அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 23 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கோவில் திறக்கப்பட உள்ளது.    1992 டிசம்பர்  6ம் தேதி இங்கு நிறுவப்பட்டிருந்த  பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடத்தில்  16ம் நூற்றாண்டு  ரை ராமர் கோவில் இருந்ததாக இந்து அமைப்புக்கள் தெரிவித்து வந்தன.  இந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதும்  இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.   சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம்  குறித்த  வழக்கும்  விசாரணையும் நீண்ட வருடங்களாக  உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.  

மெக்கா

2019ல்  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில்   ராமர் கோயில் கட்டலாம் . அதற்கு பதிலாக  அயோத்தியில் நகருக்குள் வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.   இதனையடுத்து  ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் அயோத்தி மாவட்டத்தில் உள்ள தன்னிப்பூரில் புதிய மசூதி கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் புதிய மசூதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மசூதிக்கு  முகமது பின் அப்துல்லா மசூதி என பெயரிடப்பட்டுள்ளது.

மெக்கா
இந்த  புதிய மசூதிக்கு மெக்காவில் உள்ள புனித மசூதியில் தொழுகை நடத்தும்  இமாம் இ-ஹராம் அடிக்கல் நாட்ட இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை சார்பில்  கட்டப்பட்ட உள்ள இந்த மசூதி   இந்தியாவிலேயே  மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 21 அடி உயரம் மற்றும் 36 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய குர்ஆனும்  இங்கு வைக்கப்படும் என  மும்பை   பாஜக தலைவர் ஹாஜி அராபத் ஷேக் தெரிவித்துள்ளார். மசூதியின் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக முகமது பின் அப்துல்லா  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web