செம... ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறைக்கு பதில் புதிய நடைமுறை.. அதிரடி உத்தரவு!!

 
ரேஷன்

தமிழகம் முழுவதும் மானிய விலையில் உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல நேரங்களில் பயோமெட்ரிக் பணி செய்யவில்லை என புகார்கள் எழுந்து வருகின்றன.  இதனை தவிர்க்கவும், மாற்று ஏற்பாடாகவும்  கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெறும் நடைமுறை  சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. அதன்படிசென்னை  சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் முதலில்  தொடங்கப்பட்டது. இந்த நிலையில்  தமிழகம் முழுவதும் 35000   ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலம்  ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. 

ரேஷன்


கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஒயாசிஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டு இருந்தது.  இதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடுதல், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் பராமரிப்பு போன்ற பணிகளை ஒயாசிஸ்  நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால், இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், மறுபடியும் ஒயாசிஸ் நிறுவனத்திற்கே அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.  இப்படி டெண்டரும் முடிவாகி உள்ளது.

ரேஷன் விரல் பதிவு கைரேகை

இதனையடுத்து  ரேஷனில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து உணவுத்துறை அமைச்சர்  சக்கரபாணி   "பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்க செயலிழந்து விடுகிறது. அதனால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்த தொடர்  புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அடுத்த 2 மாதத்திற்குள் 36000   ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகத் திட்டத்தை சீரமைத்து தமிழக மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web