தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள்?

தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. புதிய ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்கள் ஓராண்டாக காத்துக்கிடக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்ட நிலையில் இதன் காரணமாகவும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்க உள்ளது.
2021 மே மாதம் முதல் இதுவரை 15,79,393 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை மாற்றம் மற்றும் புதிய அட்டைக்காக பொதுமக்கள் அலைய வேண்டியதை குறைக்கும் வகையில் www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா