அக்டோபர் 1 முதல் சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள்!!அதிரடி!!

 
சிம் கார்டுகள்

தொழில் நுட்பவளர்ச்சியால் வசதிகள் பெருகினாலும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சிம்கார்டுகள் மூலம்  நிழலுலக சதித் திட்டங்கள் அதிகரித்து முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படாது விற்பனை செய்யப்படும் சிம் கார்டுகளில் பங்கு தான் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது என சைபர் க்ரைம்குற்றம் சாட்டியுள்ளது.  சிம் கார்டுகளை விற்பனை செய்வதிலும், வாடிக்கையாளர் பெறுவதிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிம் கார்டுகள்

இதன் அடிப்படையில்  தொலைதொடர்புத் துறை பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.  பல்வேறு சைபர் குற்றங்களிலும் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளே முக்கிய பங்கு வகித்து வருகின்றன.  ஒரே பெயரில் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது   தொலைதொடர்புத் துறை விசாரணையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து  அக்டோபர்  முதல், சிம் கார்டுகள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.அதன்படி  போலி ஆவணங்கள் வாயிலாக தவறான நபர்கள் கையில் எண்ணிக்கையில் அதிகமான சிம் கார்டுகள் கிடைப்பதை அக்டோபர்   முதல் தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வருகின்றன.

ஷேர் பங்குசந்தை சாப்ட்வேர் மென்பொருள் கம்ப்யூட்டர் சைபர் க்ரைம்


 இது குறித்து   தொலைதொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்   முறைகேடாக சிம் கார்டு விற்பனையில் ஈடுபட்ட விற்பனை முகவர்கள் 67000 பேர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிம் கார்டு அடிப்படையிலான புகார்கள் குறித்து இதுவரை   300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவை அனைத்தும் உரிய ஆவணமின்றி பெறப்பட்டுள்ளன அத்துடன், ஆன்லைன்  குற்றங்களுக்கு துணை போனதாக சுமார் 52 லட்சம் மொபைல்  இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.  மோசடியாளர்கள் பயன்படுத்திய பல்வேறு வங்கிகளின் 8 லட்சம் வாலெட் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.  அதே போல் ஆன்லைன் மோசடிகளுக்கு துணைபோனதாக 66000  வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web