உஷார்... புதிய வகை கொரோனா திரிபு... பிரதமரின் முதன்மை செயலாளர் எச்சரிக்கை!!

 
கொரோனா

 2019ல் சீனாவின் வூகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனாவால்  உலகம் முழுவதும் 69.05 லட்சம் பேர் பலியாகினர். வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. படிப்படியாக தற்போது மீண்டு வரும் நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கொரோனா


இந்நிலையில் கொரோனா வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு ஈஜி.5.1 என்று அழைக்கப்படும் எரிஸ் (ERIS) வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து   நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும், பிரதமரின் முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய கொரோனா


புதிய வகை கொரோனா மற்றும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் பி கே மிஸ்ரா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். நிதி ஆயோக், சுகாதாரத்துறை உட்பட பல்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, உலக அளவில் நிலவும் புதிய வகை கொரோனா திரிபு குறித்து விவாதிக்கப்பட்டது. 50 நாடுகளில் EG.5 வகை கொரோனா திரிபும், 4 நாடுகளில் BA.2.86 வகை கொரோனா திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்த பி.கே.மிஸ்ரா, புதிய வகை கொரோனாவை மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். போதிய அளவு மாத்திரைகள் அனுப்ப வேண்டும் என்றும், மரபணு பகுப்பாய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web