நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை பதித்த புதிய சீருடை!!

 
நாடாளுமன்ற சீருடை

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்   செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி  அவைப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிரீம் நிற ஜாக்கெட்டுகள், இளஞ்சிவப்பு தாமரை அச்சிடப்பட்ட கிரீம் நிற சட்டைகள் மற்றும் காக்கி கால்சட்டைகள் .  புதிய சீருடைகள் அறை உதவியாளர்கள் உட்பட அனைத்து 271 ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  

நாடாளுமன்ற சீருடை

நாடாளுமன்ற பாதுகாப்பு சேவையின் பாதுகாப்பு அதிகாரிகள் நீல நிற சஃபாரி உடைக்கு பதிலாக ராணுவ உடை போன்று அணிவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி மூலம் இந்த புதிய சீருடைக்கான டிசைன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் ஊழியர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடைகள் தான் . மாற்றம் கிடையாது.  புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் போது சீருடையை வெளியிடும் திட்டம் இருந்தது. ஆனால், அது தாமதப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  செப்டம்பர்  6ம் தேதியே புதிய சீருடைகளை ஊழியர்கள் பெற்றுக் கொண்டு வைட்டனர்  

நாடாளுமன்ற சீருடை


செப்டம்பர் 18ம் தேதி தொடங்கும் ஐந்து நாள் சிறப்பு அமர்வுடன் பழைய  நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் நிறைவடைந்து விடும்.  செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அமர்வின் முதல் நாளில், இரு அவைகளும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்படும்.  அடுத்த நாள், புதிய கட்டிடத்திற்கு அவை நடவடிக்கைகளை மாற்றுவதற்கு முன், மத்திய மண்டபத்தில் கூட்டுக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது எனவும்  அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web