நவம்பர் 7 முதல் பெங்களூரு–எர்ணாகுளம் வழியில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். பள்ளி மாணவிகள் உள்பட 5 பேர் கடுமையாக காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே நேரத்தில், தெற்கு ரயில்வேயின் கீழ் தற்போது சென்னை சென்ட்ரல்–கோவை, சென்னை எழும்பூர்–திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல்–மைசூர் ஆகிய 11 வந்தே பாரத் ரயில்கள் இயங்குகின்றன. வேகமும், வசதியும் காரணமாக இந்த ரயில்களுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தென்மேற்கு ரயில்வே சார்பில் கர்நாடகாவின் பெங்களூரிலிருந்து தமிழகம் வழியாக கேரளாவின் எர்ணாகுளம் வரை புதிய வந்தே பாரத் ரயில் சேவை நவம்பர் 7 முதல் தொடங்கப்படுகிறது. புதன்கிழமையைத் தவிர தினமும் இயங்கும் இந்த ரயில் காலை 5.10 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூரிலிருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். மாறாக, எர்ணாகுளத்திலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரை அடையும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
