கல்யாணமாகி 4 மாசம் தான் ஆச்சு.. புதுமணத் தம்பதி தூக்கிட்டு தற்கொலை!!

 
ஸ்வேதா

தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு வயது 30. இவர் படப்பை  ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் காயத்ரிக்கும் 4 மாதங்களுக்கு முன்  பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.  காயத்ரி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து  வருகிறார்.

5வது திருமணம்

கணவன்- மனைவி இருவரும் திருமணத்துக்கு பின்  3  மாதங்களுக்கு முன்பு பெருங்களத்தூர் புத்தர் தெரு என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி  கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.  வழக்கம் போல் நேற்றும் பணிக்கு சென்ற சரவணன் இன்று அதிகாலை 3 மணிக்கு  வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் மனைவி காயத்ரி துப்பட்டாவில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறித்துடித்தார்.  

ஆம்புலன்ஸ்

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர்  இவரது வீட்டிற்கு விரைந்து வந்து பார்ப்பதற்குள் இவரும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடியிருப்புவாசிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி   பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web