கல்யாணமாகி 6 மாசம் தான்... புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா கட்டினகாரு அருகே எடமனே கிராமத்தைச் சேர்ந்த மாலாஸ்ரீ (23) என்ற இளம்பெண், வரதட்சணை கொடுமையைத் தாங்காமல் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலாஸ்ரீ, சிவமொக்கா தாலுகா கும்சி போலீஸ் எல்லைக்குட்பட்ட குரம்பள்ளி அருகே கூஜானுமக்கி கிராமத்தைச் சேர்ந்த அசோக்கை கடந்த ஏப்ரல் 23ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது மாலாஸ்ரீயின் பெற்றோர் நகை, பணம், வீட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக வழங்கியிருந்தனர். ஆனால், இதற்குப் பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு அசோக் மற்றும் அவரது பெற்றோர் மாலாஸ்ரீயை அடித்து, உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாலாஸ்ரீ, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார். சம்பவத்தை அறிந்த மாலாஸ்ரீயின் பெற்றோர், தனது மகளின் மரணத்திற்கு கணவர் அசோக்கும், அவரது பெற்றோரும் காரணம் என கும்சி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அசோக்கை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
