விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை... அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்...!!

 
மழை

தமிழகத்தின்  வடகிழக்கு  பருவமழை  மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால்  கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி   நிலவி வருவதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் எனவும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 



 சென்னையில் நேற்று இரவு தொடங்கி   விடிய விடிய நல்ல மழை பல இடங்களில் கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் பகுதி, சேத்துப்பட்டு, கிண்டி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், மந்தைவெளி மற்றும் சாந்தோம் உட்பட  பல இடங்களில் மழை தொடர்ச்சியாக இரவு முதல் காலை வரை பெய்து வருகிறது.  

இடி மின்னல் மழை


இதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம்  மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில்   நவம்பர் 22, 23, மற்றும் 24  தேதிகளில் கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள்து.  இன்று முதல் 3  நாட்கள் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும்   சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web