எதிர்நீச்சலில் அடுத்த ஆதி குணசேகரன் ?! மனம் திறந்த பிரபல நடிகர் !!
சன் தொலைக்காட்சியில் 'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் தமிழக குடும்பங்களில் ஒருவராகி விட்ட நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீரென காலமானார். இவரது ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இழப்பு நடிப்புத் துறைக்கு மாபெரும் இழப்பு. சினிமாவில் ஒரு திருப்புமுனை அமையும் காலகட்டத்தில் மாரிமுத்து உயிரிழந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரன் எனப்படும் AGS கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து வேல ராமமூர்த்தி “ நானும் , அவரும் சேர்ந்து ஒரு படத்தில் சகோதரர்களாக நடித்துக் கொண்டிருந்தோம். இதன் அடிப்படையில் சன் டிவி தரப்பிலிருந்து அடுத்த ஆதி குணசேகரனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். இதில் சீரியலுக்கு நேரம் கொடுக்க முடியுமா எனத் தெரியாது” என வேல ராமமூர்த்தி கூறிவிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!