பரபரப்பு ... 'சாட்டை' துரைமுருகன் உட்பட நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

 
நாம் தமிழர்

தமிழகத்தில் திருச்சி, கோவை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பிரபல யூ-டியூபருமான 'சாட்டை' துரைமுருகன் உள்பட அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகள், தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நாம் தமிழர்
வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து நிதி பெற்றது தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, சிவகங்கை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் இன்று காலை முதல் 50-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை
சாட்டை துரை முருகனின் வீடு, திருச்சி சண்முகா நகரில் உள்ளது. இதேபோல், மற்றொரு யூ-டியூபரான 'தென்னகம்' விஷ்ணு, நாம் தமிழர் நிர்வாகி நெல்லை மதிவாணன் உள்ளிட்டோரது வீடுகளிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் இன்று அதிகாலை முதல் திடீர் என என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web