உஷார்... நிஃபா வைரசால் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்!! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!!

இந்தியாவின் பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கியதும் மழைக்கால நோய்களும் வர ஆரம்பித்து விட்டன. சளி , இருமல், காய்ச்சலுடன் நிஃபா, இன்புளூயன்சா, டெங்கு நோய்கள் பரவத் தொடங்கிவிட்டன. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலமாம் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 1,080 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் தற்போது வரை 6 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான விகிதம் 2 சதவீதமாக இருந்து வரும் நிலையில், நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைய 40 முதல் 70 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்தான monoclonal antibody மருந்து 20 டோஸ்களை மத்திய அரசு வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி, தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களும் செப்டம்பர் 24ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் வாரம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!