நாளை வீடு வீடாக நிலவேம்பு கசாயம்... அமைச்சர் அதிரடி உத்தரவு!!

 
நில வேம்பு கசாயம்

 
தமிழகத்தில்  நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.   வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

நில வேம்பு கசாயம்


3  அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்திற்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்தப்படும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்து முகாம் நடத்தப்பட  வேண்டும். வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல்  குறித்து  ஆய்வு செய்ய வேண்டும் .  கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மா.சுப்பிரமணியன்


பள்ளிகளில்  மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  அறிகுறிகள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சைகள் வழங்கப்படும் என  மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில்  டெங்கு காய்ச்சல் பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்த போதிலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. மேலும் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று நிலவேம்புச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web