நீலகிரி மலை ரயில் சேவை தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் ரத்து!
நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டுப்பாளையம்–உதகை மலை ரயில் சேவை இன்று (அக்டோபர் 21) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹில்குரோவ்–அடர்லி இடையேயான பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், வழக்கமான மலை ரயில் சேவையும் விடுமுறை சிறப்பு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதம் இரண்டாம் பருவம் தொடங்கியதைத் தொடர்ந்து, நீலகிரி மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு மலை ரயில் சேவைகளை அறிவித்திருந்தது. ஆனால் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை, இன்று மூன்றாவது நாளாகவும் இயங்காமல் உள்ளது.

மண் சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வானிலை நிலைமை சீராகும் வரை ரயில் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
