நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு நடந்த எளிமையான திருமணம்...வைரலாகும் வீடியோ!

 
நிர்மலா சீதாராமன்

வார்டு மெம்பர், ஊராட்சி மன்றத் தலைவர், வட்டச்செயலாளர், கவுன்சிலர் வீடுகளிலேயே விருந்து, விசேஷம் என்றாலே ஊர் இரண்டு பட்டு விடும். ஆர்ப்பாட்டம், கொண்டாட்டங்கள், தலைவர்கள், பிரபலங்கள் என ஊரே திருவிழாக்கோலத்தில்  களைகட்டும். பெரும் அரசியல் தலைவர்கள் வீட்டில் திருமணம் என்றால்  கேட்கவே தேவையில்லை. பிரம்மாண்டமான முறையில் ஊரே வியக்கும் வகையில் தான் கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால் மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் ஓரே மகளான வாங்மயி ப்ரகலாவின் திருமணம் மிகவும் எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது


 

 

அத்துடன்   எந்த பெரிய அரசியல் தலைவர்களையும் அழைக்காமல் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .   இந்தியாவின் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமனுக்கு ஒரே மகள்.  இந்தியாவின் நிதித்துறையில் மட்டுமல்லாமல் பல முக்கிய பொறுப்புக்களில் இருந்து வரும் நிர்மலா சீதாராமன் இந்தியாவை கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுத்து   வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக பெண் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சராகவும் இருந்து வருபவர் நிர்மலா சீதாராமன். ஒவர்  கர்நாடக மாநிலம்  பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  

நிர்மலா சீதாராமன் குடும்பம்

இவருடைய ஒரே மகள் வாங்மயி ப்ரகலா. இவருக்கு ப்ரதீக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  பெங்களூர் தனியார் ஹோட்டலில் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மத்திய நிதியமைச்சராக இருந்துக்கொண்டு நிர்மலா சீதாராமன், தனது மகளின திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார் என்பது பலரின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. நிர்மலா சீதாராமனின் கணவர் பொருளாதார நிபுணர்  சமூக விமர்சகர் டாக்டர் பரகலா பிரபாகர், இவருடைய கணவர் குடும்பம் காங்கிரஸ் ஆதரவாளர்  .  பெற்றோர் இருவரும் அரசியல் பின்புலம் கொண்டிருந்தாலும், திருமணம் எளிமையாக நடந்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வாங்மயி ப்ரகலா ஒரு தேசிய பத்திரிக்கையில் பணிபுரிந்தார்.  இவர் ஆங்கில இலக்கியத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்று அமெரிக்காவில் பத்திரிக்கை துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web