நித்யாமேனனுக்கு மலையாள நடிகருடன் திருமணம்?!

 
நித்யாமேனன்


 இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நித்யாமேனன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி   தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல  மொழிகளில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான   உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல்   திரைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது.

நித்யாமேனன்

குறிப்பாக தனுசுடன் நித்யாமேனன்   நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நித்யாமேனன்   தென்னிந்திய மொழிகளில் விரும்பப்படும் நடிகையாக  இருந்து  வருகிறார்.இறுதியாக நித்யா மேனன் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில்   நித்யாவின் நடிப்பு பலரது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றது.  

நித்யாமேனன்

அவரின் கண்கள் கூட நடிப்பதாக இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்த்தியிருந்தார். படத்தைப் பார்த்த ரசிகர்கள் நித்யா மேனன் போல தங்களுக்கு ஒரு தோழி இல்லையே என ஏங்கியதாக தெரிவித்தனர்.  இந்நிலையில் நித்யா மேனன் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து நடிகை நித்யா மேனனோ அவரது உறவினர்கள், நண்பர்களோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web