பாஜகவுடன் கூட்டணி இல்லை..!! ஜெயக்குமார் ஆவேசம்!!

 
ஜெயக்குமார் அண்ணாமலை

தமிழகத்தின்  பாஜக தலைவர் அண்ணாமலை . இவர் அண்ணா பிறந்தநாளில்  பேரறிஞர் அண்ணாவை பற்றி விமர்சனம் செய்திருந்தார்.இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் அண்ணாமலை நான் பேசியது சரிதான். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என பதில் அளித்திருந்தார்.   இன்று இது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ”கூட்டணி தர்மம் குறித்து பேச  அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை.   தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.  

ஜெயக்குமார்

அண்ணாமலை செயல்பாடு குறித்து ஏற்கனவே பாஜக மேலிடத்தில் புகார் செய்துள்ளோம். பல முறை எச்சரிக்கை விடுத்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை.அதிமுக தொண்டர்களான   சிங்க கூட்டத்தை பார்த்து சிறு நரி ஊளையிடுகிறது.  தமிழகத்தில் பிஜேபி இங்கு காலூன்ற வாய்ப்பில்லை.   அதிமுகவால் உங்களுக்கு அடையாளம்.   பாஜகவுக்கு காலே இல்லை. எப்படி காலூன்ற முடியும் என்பதே  கட்சியின் கருத்து.  இப்போதைக்கு பாஜகவுடன்  கூட்டணி இல்லை. தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.பாஜக தனித்து நின்றால் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெற முடியும். பாஜக கூட்டணி இல்லை என்றால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. தனித்து நின்று அண்ணாமலையால் வெற்றி பெற முடியுமா? கட்சி மேலிடம் சொல்லித்தான் இவர் இப்படி பேசுகிறார்.

அண்ணாமலை
அதிமுக கட்சியின் முன்னோடிகளை விமர்சிப்பதை  பொறுத்துக் கொள்ளாது.  அதிமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிகரமானவர்கள். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள  இப்படி பேசிக்கொண்டு திரிகிறார்.   தகுதி இல்லாத இவரை போன்ற தலைவர்கள்  தலைக்கனத்தில் இப்படி பேசுகிறார்கள்.  எந்த பூச்சாண்டிக்கும் அதிமுக பயப்படாது எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web