வெள்ளை பஞ்சுமிட்டாய்க்கு தடையில்லை... அமைச்சர் அதிரடி!

 
பஞ்சு மிட்டாய்

சென்னையில் பூங்காக்கள், கடற்கரை ஓரங்களில்  விதவிதமான வண்ணங்களில் பஞ்சுமிட்டாய் விற்பனை களைகட்டும். அதிலும் விடுமுறை தினங்களில் கேட்கவே வேண்டாம். பஞ்சு மிட்டாய்  கைகளில் இல்லாத குழந்தைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்நிலையில் மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்யப்பட்டு  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,  பரிசோதித்தனர்.   அந்த ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.  அதன்படி பஞ்சுமிட்டாயில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

பஞ்சு மிட்டாய்

 இது புற்றுநோயை உருவாக்கும் காரணி என்ற அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டனர்.  இதன் அடிப்படையில் தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.   உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  தடையை மீறி பஞ்சு மிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

பஞ்சு மிட்டாய்

அதில் தமிழகத்தில் நிறமி கலக்கப்பட்டபஞ்சு மிட்டாய்க்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும்,  வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை எனவும்  தெரிவித்துள்ளார்.  நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நிறம் கலக்கப்படாத வெண்மை நிற பஞ்சுமிட்டாய் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web