புயலுக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பு இல்லை என்றும், வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை. தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு
மண்டலமாக வலுப் பெறாது . இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு 20.4 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (அக்.22) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவுவான விவரங்கள்: எண்ணூரில் 12 செ.மீ, மதுரவாயல், நெற்குன்றத்தில் 11 செ.மீ, வடசென்னையில் 10 செ.மீ, வளசரவாக்கம், மணலியில் 9 செ.மீ, வடபழனி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, துரைப்பாக்கம், கொரட்டூர், விம்கோ நகரில் 8 செ.மீ, எம்.ஜி.ஆர். நகர், மத்திய சென்னை, கண்ணகி நகர் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
