யாருக்கெல்லாம் மின் கட்டண உயர்வில் மாற்றம் இல்லை? மின்சார வாரியம் விளக்கம்!

 
மின்சாரம்
 

தமிழகம் முழுவதும் ஜூலை 16  இன்று முதல்  குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை  தமிழ்நாடு மின்சார ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி 4.83% சதவீதம் வரை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு ஜூலை1 ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தி வருபவர்களுக்கு  ரூ.4.60 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்  தற்போது அதனை ரூ.4.80ஆக வசூலிக்கப்படும் .   1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு  ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.11.25 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் , இதற்கு பின் ரூ.11.80 வசூலிக்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கட்டணம் உயர்வு ?

50 யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ.9.70 காசுகள் இருந்து இனி ரூ.10.15 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.  புதிய மின் இணைப்பு பெறுபவர்களுக்கான  கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குடிசை மற்றும் குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனைக்கு உண்டான மின் கட்டணம் ரூ.7.15-ளிருந்து ரூ.7.50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
யாருக்கு மாற்றம் இல்லை :

தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. 63 லட்சம் பேருக்கு மாதம் ரூ.5 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும். 35 லட்சம் நுகர்வோருக்கு மாதம் ரூ.15 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும்.  25 லட்சம் நுகர்வோருக்கு மாதம் ரூ.25 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும் எனவும் 13 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ. 40 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் இந்த மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு  விளக்கமளித்து அறிக்கை ஒன்றை தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கடந்த 2011-12ல் ம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பு  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.94,312 கோடி மேலும் அதிகரித்துள்ளது.  

மின்சாரம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை. 2021-22 லிருந்து  100% முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்கப்படவில்லை. இதன் அடிப்படையில்  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. 
இவ்வாறு அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என விளக்கம் அளித்துள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!