மன்னிப்பு கேட்க முடியாது... மன்சூர்அலிகான் கறார்... சூப்பர் ஸ்டார் கண்டனம்!

 
த்ரிஷா

மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியது தமிழ் திரையுலகில் பெரும்  பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து உருவான சர்ச்சையில் தொடக்கத்தில் இருந்தே நான் இதற்காக  மன்னிப்புக் கேட்க முடியாது என மன்சூர் அலிகான் சொல்லிக் கொண்டு இருந்தார். இதனையடுத்து அவர் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம்   உத்தரவு பிறப்பித்தது.  தென்னிந்திய நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்குத் தங்களது கண்டனங்களை தெரிவித்து கொண்டது.


 

இது விவகாரம் குறித்து மீண்டும் இன்று காலை மன்சூர்  அலிகான், ” நான் தவறே செய்யவில்லை.   அதனால் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என   அலட்சியமாகப் பேசினார்”.  இந்த விஷயம், பொதுவெளியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மன்சூர்-த்ரிஷா விஷயம் குறித்து தெலுங்கு சூப்பர் ஸ்டார்  சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்

த்ரிஷா

அதில்  ‘நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையுமே இழிவுப்படுத்தும் விதமாகதான் அப்படி பேசியுள்ளார். இது அருவருக்கத்தக்கதாக உள்ளது. இந்த விஷயத்திற்கு நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் த்ரிஷாவுக்கு மட்டுமல்ல, இதுபோன்ற தகாத வார்த்தைகளை எதிர்கொள்ளும் அத்தனை பெண்களுக்கும் துணை நிற்பேன்” என பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவு பெருகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web