அடுத்த அதிர்ச்சி... நாளை முதல் பிபிஎப் கணக்கிற்கு வட்டி கிடையாது!

 
பிபிஎப்
 

 

நாளை அக்டோபர் 1 ம் தேதி முதல்  இந்தியா முழுவதும்  குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நடைபெறும் என தெரிகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் முதல் செல்வமகள் சேமிப்பு கணக்கில் மாற்றங்கள்  கொண்டு வரப்படவுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றன.   அன்றைய தினம் காலை 6 மணி முதல் புதிய விலை அமலுக்கு வரும்.  எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டுகளில்  லாயல்டி திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

சேமிப்பு

அது போல் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் (சுகன்யா சம்ரித்தி திட்டம்) மாற்றம் செய்யப்பட உள்ளது.  இந்த புதிய விதிகளின் கீழ் சிறுமிகளின் சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே முதல் நாள் முதல் இந்தக் கணக்குகளை இயக்கி வர வேண்டும். புதிய விதிமுறைகளின்படி, ஒரு பெண்ணின் எஸ்எஸ்ஒய் கணக்கை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலர் இன்றி வேறு யாராவது இயக்கி கொண்டிருந்தால் அந்த கணக்கு உடனடியாக  சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு மாற்றப்பட வேண்டும்.

பிபிஎஃப் சேமிப்பு

அவ்வாறு செய்யாவிட்டால் அந்த கணக்குகள் உடனடியாக முடக்கப்படும். அது போல் பிபிஎஃப் எனப்படும் தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தில் 3 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதன்படி ஒரே பெயரில் பல கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிபிஎப் கணக்கு வைத்திருப்பவருக்கு 18 வயது நிறைவடையும் வரை தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் வட்டி கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web