எத்தனை முறை சொல்லியும் கேட்கவில்லை... பெங்களூருவில் பாடம் புகட்டிய அதிகாரிகள்!

 
பெங்களூரு
 


பெங்களூருவில் கங்காநகர் பகுதியில் சிலர் தெருவோரங்களில் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியதால், அதற்கு வித்தியாசமான முறையில் அதிகாரிகள் பாடம் புகட்டினர்.பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை துறையின் தலைமை செயல் அதிகாரி கரீ கவுடா தலைமையில் நடைபெற்ற நடவடிக்கையில், சாலையோரங்களில் குப்பைகளை வீசி சென்றவர்களின் செயல்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன. பின்னர், அடையாளம் காணப்பட்ட நபர்களின் வீட்டு வாசலின் முன் அந்தக் குப்பைகளே கொண்டு வந்து கொட்டப்பட்டன.

இதனை பார்த்த அந்த வீட்டுக்காரர்கள் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், “இது ஒரு விழிப்புணர்வு முயற்சி. இனி தெருவோரங்களில் குப்பை கொட்ட வேண்டாம் என்பதற்காக இதை செய்தோம்” என விளக்கமளித்தனர்.

அதிகாரி கரீ கவுடா கூறுகையில், “பெங்களூருவில் தினசரி 5 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் கழிவுகளை சேகரிக்கின்றனர். இருந்தும் சிலர் தெருவோரங்களில் குப்பை கொட்டுகின்றனர். அதனால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இனி குப்பை கொட்டும் நபர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுவரை 218 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.பெங்களூருவில் இந்த வித்தியாசமான நடவடிக்கை சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டைப் பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!