எவ்வளவு சொல்லியும் தனிக்குடித்தனம் வரல.. விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!
மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் இரண்டாவது மகள் தீபா (வயது 34). எம்பிஏ பட்டதாரியான இவர், மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டையை சேர்ந்த மகன் இப்ராகிம் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபா இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரை அத்திபா என மாற்றிக்கொண்டார். இரண்டு வருடங்கள் கழித்து இப்ராகிம் மற்றும் அத்திபா தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இப்ராஹிம் தனது பெற்றோர் குலாம் மைதீன்-பாத்திமா மற்றும் மூத்த சகோதரர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஹாஜிரா ஆகியோருடன் ஒரு கூட்டு வீட்டில் வசித்து வந்தார்.
அப்துல்லாவும், இப்ராகிமும் தற்போது துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில், தான் சம்பாதித்த பணத்தை இப்ராகிம் தனது சகோதரருக்கு கொடுத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்திய அத்திபா , கணவரை தனிக்குடித்தனம் செய்ய வற்புறுத்தினார். தனிக்குடித்தனம் அனுப்ப முடியாது. ஒன்றாக வாழ முடியவில்லை என்றால் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வெளியே செல்லுங்கள் என கணவரின் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் கூறியதாக கூறப்படுகிறது.
கணவன்-மனைவி வாழ்க்கையில் தனது கணவரின் அண்ணன் மற்றும் அவரது மனைவியின் தலையீட்டால் மனமுடைந்த அத்திபா , "என்னால் அவர்களுடன் இருக்க முடியாது, நான் இறந்த பிறகு என் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று தனது செல்போனில் வீடியோ எடுத்தார். நேற்று காலை பல்லவராயன்பேட்டை வீட்டில், பெற்றோருக்கு அனுப்பி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்துவிட்டு அத்திபாவின் வீட்டிற்கு சென்ற அவர், அதிபா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அத்திபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இயற்கைக்கு மாறான மரணம் என 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்திபா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அத்திபாவின் கணவரின் சகோதரர் அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து, அத்திபாவுக்கு போதிய இழப்பீடு வழங்கக் கோரி, அத்திபாவின் உறவினர்கள் உடலை பெற்றுக் கொள்ளாமல் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். மேலும், அத்திபாவின் வீடியோவை போலீஸாரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அத்திபாவின் சகோதரர் ராஜா கூறுகையில், ""பட்டியலின சாதியை சேர்ந்தவர் என்பதால், அக்காவை கணவர் குடும்பத்தினர் தரக்குறைவாக பேசியதில், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.எனவே, இதற்கு காரணமான அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!