இந்தியர்களுக்கு புதிதாக விசா வழங்கப்படமாட்டாது... இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அதிரடி அறிவிப்பு!
இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர், இந்தியா மற்றும் பிற நாடுகளை நோக்கி ஒரு கடுமையான விசா நடவடிக்கையை இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்தியர்களுக்கு இனி புதிதாக விசா வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து-யூகே இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் கையெழுத்தானது.
இதில் விசா விடயங்கள் அடங்கவில்லை எனவும், அந்த ஒப்பந்தம் வர்த்தகம், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து மட்டுமே என்பதை பிரதமர் ஸ்டார்மர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
"இந்த வர்த்தக ஒப்பந்தம், விசா வழங்கும் செயல்முறையை பாதிக்காது.
இந்தியர்களுக்காக விசா விதிகளை தளர்த்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை," என அவர் கூறினார்.
விசா தடையைப் பற்றி முக்கிய விவரங்கள்:
இங்கிலாந்து பயணத்திற்காக இந்தியர்கள் இனி புதிய விசா பெற முடியாது.
ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் மீது உடனடி தாக்கம் இல்லை.
வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல பிரிவுகளில் விசா அனுமதி கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இங்கிலாந்து தற்போது உள்நாட்டு வேலையிழப்பு, குடியுரிமை பாதுகாப்பு, சமூக சேவைகள் அழுத்தம் ஆகியவற்றை காரணமாகக் கூறி, வெளிநாட்டு குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை வைத்து விசா வசதிகளை நம்பியிருந்த பலர் இந்நிலையில் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்இந்த அறிவிப்பால் மாணவர்கள், தொழிலாளர்கள், மற்றும் குடும்ப பயணத்திட்டங்கள் உள்ளவர்களுக்கு தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
