உலகக் கோப்பையில் இடம் இல்லை... சாஹல் வேதனை!!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. நவம்பர் 19 வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதற்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 5-ம் தேதி ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அதில் இடம்பெற்ற அக்சர் படேல் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். காயம் குணம் அடைவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹலிடம் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாதது குறித்து கேட்ட போது, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு சற்று வருத்தமாகத்தான் உள்ளது. எனினும் வாழ்க்கையில் எதையும் கடந்து போக வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்று கொண்டிருக்கிறேன். இது போன்றே 3 உலகக்கோப்பைகளில் இடம்பெறவில்லை. எனவே இந்த மனநிலை எனக்கு பழகிவிட்டது எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...
