50 செமீ வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு... வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகுங்க!

 
பனி, மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி பருவமழை தற்போது விலகும் நிலைக்குள் சென்றிருப்பதாகவும், அக்டோபர் 16 முதல் 18 வரை மழை குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்டோபர் 1 முதல் இதுவரை மாநிலத்தில் சராசரியாக 5 செ.மீ. மட்டுமே மழை பதிவாகியுள்ளதாக கூறினார், இது இயல்பு அளையான 17 செ.மீ.யை விட குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 10 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், பருவமழை காலமான அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை புயல் உருவாகும் சாத்தியம் இருந்தாலும், அது எப்போது, எங்கு உருவாகும் என்பது குறித்து துல்லியமான கணிப்புகள் இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இயற்கை நிகழ்வுகளை 100% துல்லியமாக கணிக்க இயலாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மழை குறைவால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தயாராக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?