பிரபல சிஐடி நடிகர் தினேஷ் பட்னிஸ் காலமானார்... பிரபலங்கள் அஞ்சலி!

 
சிஐடி

பிரபல சிஐடி நடிகர் தினேஷ் பட்னிஸ் நேற்று நள்ளிரவு, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57.  சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தினேஷ் பட்னிஸ், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு காலமானார்.

சிஐடி

முன்னதாக உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிஐடி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் தினேஷ் பட்னிஸ் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் தினேஷ் காலமானதை, தினேஷின் நெருங்கிய நண்பரும், சக நடிகருமான தயானந்த் ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

சிஐடி

நடிகர் தினேஷின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என்று நடிகர் தயானந்த ஷெட்டி தெரிவித்துள்ளார். நடிகர் தினேஷ் மறைவுக்கு மும்பை திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கல்லீரல் பாதிப்பு மற்றும் பல உறுப்புகள் சேதமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தினேஷ், திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெண்டிலேட்டர் மூலம் நடிகர் தினேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

க்ரைம் திரில்லர் ஜானரில் ஒளிபரப்பப்பட்ட சி.ஐ.டி. தொலைக்காட்சி தொடரில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றிருந்தார் நடிகர் தினேஷ். இந்தியில் ஒளிப்பரப்பான இந்த தொடர் கடந்த 1998ம் ஆண்டு ஒளிப்பரப்ப துவங்கி 2018ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 வருடங்கள் ஒளிப்பரப்பானது. இந்த தொடரில் ஃபெடரிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தினேஷ். இந்த தொலைக்காட்சி தொடர் தவிர்த்து சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்களும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web