காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதியை பொறுத்தவரை 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 14ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ளன. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ம் தேதியும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதியும் காலாண்டு தேர்வும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியாண்டினை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு , அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும். தேர்வுகள் முடிவடைந்த பிறகு பள்ளிக்கு சில நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான காலாண்டு தேர்வு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த பின்னர் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!