மழையால் ரத்தான தேர்வுகளுக்கான மறு தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

 
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கல்லூரி மாணவிகள்

இதனிடையே மிக்ஜாம் புயலின் காரணமாக கடந்த டிசம்பர் 4 மற்றும் 5ம்  தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தால் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

இந்நிலையில் வரும்  டிசம்பர் 10-ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நிறைவடைய உள்ளதால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் டிச -11,12ம் தேதிகளில் நடைபெறும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபுஜனார்த்தனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web