“வருங்காலம் நமதே ... தீர்க்கமாகத் திட்டமிடுவோம்”... நவம்பர் 5 தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்... விஜய் அறிவிப்பு!

 
விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.
நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஒரு ஆழ்ந்த அமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும், உங்களை அழைக்கவும் எழுதும் கடிதம் இது.
சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்’, அச்சமின்றி அதனை உடைத்தெறிந்து நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. இதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை — கடந்த ஒரு மாத காலமாக தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வெல்லலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர். கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான் நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் எடுத்து வைக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கவும், முக்கிய முடிவுகள் எடுக்கவும், கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம்.

தவெக

அதன்படி, வருகிற நவம்பர் 5, 2025 (புதன்கிழமை) அன்று, மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில், காலை 10.00 மணிக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.

வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம்.
வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாகத் திட்டமிடுவோம்.
நல்லதே நடக்கும் — வெற்றி நிச்சயம்.”

இவ்வாறு தனது அறிக்கையில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!