இனி பத்திரப்பதிவிற்கு இது கட்டாயம்.. அதிரடி உத்தரவு!!

 
பத்திரம்

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் பெரும்  மோசடிகள் நடைபெற்று வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில்   பத்திரப்பதிவு துறையில் முறையான பத்திரங்களை பதிவு செய்ய அசல் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படும் என பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.தமிழகம் முழுவதும் அனைத்து   பதிவுத் துறை அலுவலகங்களும்  கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறையில் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பதிவுத்துறை அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்களின் அராஜக போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் பத்திர பதிவுக்கு வரும் சொத்து விற்பவர்கள், வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக வருவதாக குற்றச்சாட்டுக்களும், புகார்களும் அதிகரித்து வருகிறது.  

பத்திரப்பதிவு

அதே சமயம் போலி ஆவணப்பதிவை குறைப்பதற்காக GPS இயக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதனை முறைப்படுத்தும் வகையில்  அக்டோபர் 1 முதல் நிலங்களின் புகைப்படம் மற்றும் புவியியல் விவரங்களுடன் பத்திரம் பதிவு செய்யும் நடைமுறை தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.

பத்திரப்பதிவு

இந்த புதிய நடைமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டும்.   கூடுதல் வழிகாட்டுதல் பதிவுத்துறை தலைவரால் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.பத்திர பதிவுக்கு வருபவர்கள்  பணம் கொண்டுவர தேவையில்லை,  ஏடிஎம் கார்டு மூலமே பதிவு கட்டணத்தை  செலுத்தலாம் எனவும்  கூறப்பட்டுள்ளது.பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் நுழையத் தடை. மீறி உள்ளே நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் இவர்களின்  நடமாட்டத்தை கண்காணிக்க தவறும் சார்பதிவாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அதே நேரத்தில் அலுவலகப் பணி காரணமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் வரலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web