இனி ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் பரிவர்த்தணை!!

 
ரேஷன் கார்டு

சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தொடங்கி ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் வரை பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பணம் கொடுத்து வாங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணம் இல்லா பண பரிவர்த்தனை  மூலம்  ஜி பே , பேடிஎம் மூலம் இனி பணம் செலுத்து வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

ரேஷன்


நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியும் வேகமாக  மாறி  வருகிறது. அந்த வகையில் பணம் இல்லாத பணப்பரிவர்த்தனையை நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்று தற்போது ஜி பே, பேடிஎம் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன.   ரூ 10 க்கு பொருட்கள் வாங்கினாலும் ஜி பே மூலம் பணம் கொடுக்கும் பழக்கம் அதிகமாக வருகிறது. தனியார் கடைகளில் செயல்படுத்தப்படும் இந்த பணம் பரிவர்த்தனை தற்போது அரசு சேவைகளிலும் படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளது. 

ரேஷன் விரல் பதிவு கைரேகை


 உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் ரேஷன் கடைகளிலும் இனி யுபிஐ வசதி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,  சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாய விலைக் கடைகளில் 562 கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்வது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள 26 கடைகளிலும்  விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை மாநகர் முழுவதும் மொத்தம் உள்ள  1700 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில் 1500 க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் இத்திட்டம் தமிழகம்  முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web