தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஆவணங்களில் கையெழுத்திட சாட்சி அளிக்கும் நோட்டரிகள் சேவை தேவை அதிகரித்த நிலையில், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச நோட்டரிகள் எண்ணிக்கையை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நோட்டரிகள் எண்ணிக்கை 2,500-ல் இருந்து 3,500 ஆக உயர்த்தப்படலாம். குஜராத் மாநிலத்தில் 2,900 இருந்த நோட்டரிகள் எண்ணிக்கை 6,000 ஆக அதிகரிக்கப்படும்.

மக்கள்தொகை அதிகரிப்பு, மாவட்டங்கள், தாலுகாக்கள் எண்ணிக்கை உயர்வு மற்றும் நோட்டரி சேவையின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
