அடுத்த அதிர்ச்சி... பணி முடிந்து வீட்டிற்கு சென்ற செவிலியர் பாலியல் பலாத்காரம்!
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில், பணி முடிந்து மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட தகவல் வெளியாகி கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 30ம் தேதியன்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர், ருத்ராபூரில் உள்ள இந்திரா சௌக்கிலிருந்து இ-ரிக்ஷாவை எடுத்துச் செல்வது சிசிடிவி காட்சிகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் உத்தரபிரதேசத்தின் பிலாஸ்பூரில் உள்ள காஷிபூர் சாலையில் உள்ள தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு அவர் திரும்பவில்லை, அங்கு அவர் தனது 11 வயது குழந்தையுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.
அடுத்த நாள், தனது சகோதரியைக் காணவில்லை என்று அவரது தங்கை புகார் அளித்தார். புகார் செய்யப்பட்டு 8 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 8ம் தேதி, உத்தரப் பிரதேச போலீசார் திப்திபா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 1.5 கிமீ தொலைவில் உள்ள வெற்றுப் பகுதியில் அவரது உடலைக் கண்டெடுத்தனர்.உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தனர். அதன் பின்னர் செவிலியரின் திருடப்பட்ட செல்போனைக் மொபைல் ஃபோனை அவர்கள் கண்டுபிடித்தனர். இதன் பின்னணியில் உத்தரப் பிரதேசத்தின் பரேலியைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளியான தர்மேந்திரா என்பவரை ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குடிபோதையில் இருந்த தர்மேந்திரா, சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு பாதிக்கப்பட்ட செவிலியரைக் கண்டுள்ளார். அவர் தனது அடுக்குமாடி கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டபோது, அவளைப் பின்தொடர்ந்து சென்று தாக்கியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்."அதன் பின்னர் செவிலியரை அருகிலுள்ள புதர்களுக்கு இழுத்துச் சென்று, பலாத்காரம் செய்து அவரது தாவணியைப் பயன்படுத்தி, கழுத்தை நெரித்து கொலைச் செய்துள்ளார்" என்று உதம் சிங் நகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் பின்னர் செவிலியரின் செல்போனையும், அவர் வைத்திருந்த ரூ.3,000 பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணி நேரத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு தழுவிய எதிர்ப்புக்கு மத்தியில் இந்த விஷயம் வெளியாகி பதற்றத்தை அதிகரித்துள்ளது.இந்த கொடூர சம்பவம் மருத்துவர்களின் பணியிடங்களில் சிறந்த பாதுகாப்புக்கான கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும் என்று உறுதியளிக்கக் கோரி நாடு முழுவதும் உள்ள குடியுரிமை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
