பசும்பொனில் சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் – செங்கோட்டையன்

 
சசிகலா ஓபிஎஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, இன்று தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தினர்.

சசிகலா ஓபிஎஸ்

இந்த நிகழ்வில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.

பின்னர் மூவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி.டி.வி. தினகரன், “அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி அல்ல; எங்களது அரசியல் எதிரி இ.பி.எஸ். மட்டும் தான். அவரை வீழ்த்தும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என தெரிவித்தார்.

சசிகலா ஓபிஎஸ்

இதையடுத்து தினகரன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரும் சிறிது நேரம் தங்கி, வி.கே. சசிகலாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அப்போது மூவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் சசிகலா பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து வழிபாடு செய்து மரியாதை செலுத்தினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?