அக்டோபர் 25ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

தஞ்சாவூர் பெரிய கோவில்  மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.  இந்த கோவில் கட்டிமுடித்து  1000 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் மெருகு குறையவில்லை.  இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில், 2 நாட்கள் சிறப்பாக விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தஞ்சாவூர்


அதன்படி, இந்தாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா அக்டோபர் 24 ம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான 25ம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

விடுமுறை

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு அக்டோபர்   25ம்  தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   2 நாட்கள்  நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web