தமிழகத்தில் அக்.3ம் தேதி விடுமுறை?! முதல்வரிடம் அரசு ஊழியர்கள் கோரிக்கை!

 
தமிழக அரசு

ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையைத் தொடர்ந்து அக்டோபர் 3 தேதியை விடுமுறையாக அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை, 2ம் தேதி விஜய தசமி அரசு விடுமுறை தினங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்.3ம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்க கோரி கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் அளித்த கோரிக்கை மனுவில், “அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை விடுமுறையாகவும், 2ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்விடுமுறை நாட்கள் முறையே புதன் மற்றும் வியாழக்கிழமையில் வருகின்றன. அடுத்து வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. 

அதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே 3-ந் தேதி ஒருநாளை மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இப்பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்பவர்களும் இவ்விடுமுறையை நன்றாக கொண்டாடிவிட்டு பணிக்கு மகிழ்வுடன் வருவார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே இந்நாட்கள் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் 3ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?