10 முறை சட்டமன்ற பிரவேசம்.. ஒடிசா மக்களால் போற்றப்படும் ”மகாராணி”.. சென்னையில் காலமானார்..!

 
சுக்னனா

ஒடிசாவில் 10 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வி.சுக்னனா குமாரி தியோ (87), வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (பிப்.,9) அதிகாலை 1:00 மணியளவில் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, முதல்வர் நவீன் பட்நாயக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.


அவரது மறைவுக்கு ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இரங்கல் செய்தி குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், “அவர் பொது சேவையில் முத்திரை பதித்தவர். 10 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மன்னர் ஆர்.வி.எம்.நிலாடி டியோவுக்கு மகளாகப் பிறந்த சுக்னானா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.  பட்டம் பெற்றார். அவர் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கலிகோட் சமஸ்தானத்தின் மன்னர் ராமச்சந்திர மர்தராஜா தியோவின் மருமகள் மற்றும் ஒடிசா மக்களால் 'மஹாராணி' என்று அழைக்கப்பட்டார்.

Odisha CM meets ailing BJD leader V Sugnana Kumari Deo in Chennai

அவரது அரசியல் வாழ்க்கை 1960 இல் தொடங்கியது மற்றும் அவர் முதன்முதலில் 1963 இல் கல்லிக்கோடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் 1974ல் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை காளிகோட்டில் இருந்தும், 2 முறை கபிசூர்யாநகரிலிருந்தும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிஜு ஜனதா கட்சியின் சார்பில் 1985ல் மீண்டும் காளிகோட்டில் வெற்றி பெற்ற அவர், 2014 வரை எந்தத் தேர்தலிலும் தோல்வி அடையவில்லை.

2019 சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 1963, 1974, 1977, 1985, 1990, 1995, 2000, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒடிசா அரசியலில் நீண்ட காலம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web