பத்திரமா இருங்க மக்களே.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

 
நிலச்சரிவு

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்  வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில்  மேலும் 300 பேர் மாயமாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

நேபாள் நிலச்சரிவு

ஓயாத மழையின் இடையில் தற்போது மீட்பு பணியும் இடையறாமல் நடந்து வருகிறது.  இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு எதிரொலியால் தமிழகத்தின் மலை மாவட்டங்களான திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி மற்றும் திருப்பூர்  மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள நிலச்சரிவு

இந்த மாவட்டங்களை மழை நாட்களில் அதிகாரிகள் கண்காணித்து   மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!