சர்ச்சை... சாலையோர வியாபாரிகளை தோப்புக்கரணம் போடவைத்த அதிகாரிகள்!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவிலுக்கு அருகே சாலையோரத்தில் பூஜை பொருட்கள் விற்ற வியாபாரிகள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் பாதையை ஆக்கிரமித்ததாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் அந்த வியாபாரிகளை தண்டனை அளிக்கும் விதமாக தோப்புக்கரணம் போட வைத்தனர். அதுமட்டுமின்றி, சிலரிடம் சுவரில் தலைகீழாக நிற்கவும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த சம்பவத்தின் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளன. பொதுமக்களிடம் அவமானகரமான முறையில் நடந்துகொண்ட அதிகாரிகளின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.சம்பவம் குறித்து மாநில நிர்வாகம் விளக்கம் கோரியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
