அடப்பாவிகளா... உட்கார நாற்காலி தரலை... கல்யாணத்தை நிறுத்திய மணமகன்!

 
திருமணம்

இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வார்களா? என்று அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் தனது பாட்டி அமர்வதற்கு நாற்காலி தராததால் தொடங்கிய சண்டை, நடைபெற இருந்த திருமணத்தையே நிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்றது. 

இது குறித்து பேசிய மணமகளின் தந்தை முகமட் முபீன், கல்யாண கொண்டாட்டங்கள் தொடங்கிய பின்னர், ஒரு வயதான பெண்மணிக்கும், திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தொடங்கியது.

Bulandshahr: Groom Calls Off Wedding After Dispute Over Grandmother Not  Getting Chair To Sit

அந்த வயதான பெண்மணி, மணமகனின் பாட்டி என்றும், அவர் உட்கார ஒரு நாற்காலி கேட்டுள்ளார், ஆனால் அது அவருக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அவர், மாப்பிள்ளையிடம்  குறையாக அழுதபடியே முறையிட்டுள்ளார். அதன்  பின்னர் இந்த விவகாரம் பெரிதாகி மேலும் பலர் சிக்கியுள்ளனர். மணமகனும் அவரது சகோதரரும் குழப்பத்தில் சேர்ந்து, "மணமகள் நீ எங்களுடன் வீட்டிற்குச் வந்தால் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர்" என்று திருமணத்திற்கு வந்த விருந்தினர் கூறினார்.

Wedding Called Off In Uttar Pradesh After Groom's Objection Over Grandma's  Missing Chair

பாட்டிக்கு நாற்காலி கொடுக்காததால் மணமகன் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தார். மணமகளின் தரப்பு மணமகனின் குடும்பத்தினரை இடத்தை விட்டு வெளியேற அனுமதித்தது, ஆனால் அவர்கள் வரவேற்புக்காக செலவழித்த தொகையை செலுத்திய பின்னரே போகுமாறும் கேட்டுக்கொண்டது. அதன்படி தொகையை கொடுத்து விட்டு மண்டபத்தை விட்டு மணமகன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web