அட... பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் அமல்.... அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

 
அரசு ஊழியர்கள்

இந்தியாவில் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் சில விதிமுறைகளுடன் அமல்படுத்தப்படும் என  அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அரசு அலுவலகம்
2004ல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு  பழைய ஓய்வூதிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.  புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி  குடும்ப ஓய்வூதியம்  உட்பட பல  பலன்கள் தடை செய்யப்பட்டன. இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என  கோரிக்கைகளை  முன்வைத்துள்ளனர்.   பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம்  மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில்   உத்தரகாண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட சில விதிமுறைகளுடன்  மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  

அரசு ஊழியர்கள்

அதன்படி  2005 ம் ஆண்டுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டங்களின் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.  இன்னும் 28 துறைகளில் 35 பிரிவுகளில் ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்களின் பட்டியல் முழுமை அடையாமல் இருப்பதாகவும்,  செப்டம்பர் 12 ம் தேதிக்குள் அனைத்து துறைகளும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு  தேர்வு செய்யப்பட பணியாளர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரகாண்ட் அரசு அறிவுறுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web