31 வயசு தான் ஆச்சு... ஒலிம்பிக் வீராங்கனை கார் விபத்தில் பலி!! அதிர்ச்சி!!

 
அலெக்சாண்டரா பால்

 ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு வீராங்கனை  அலெக்சாண்ட்ரா பால் .இவர் மோசமான கார் விபத்தில் சிக்கி பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவருக்கு வயது 31.
கனடாவை பூர்வீகமாக கொண்ட அலெக்சாண்டரா பால் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் பிரதான விளையாட்டான ஐஸ் ஸ்கேட்டிங்கில் கனடா சார்பில் பல  வெற்றிகளைக் குவித்தவர் . ஐஸ் ஸ்கேட்டிங் பார்ட்னரும், தனது கணவருமான மிட்செல் இஸ்லாம் உடன் இணைந்து இவரின் சாதனைகள், விரைவான ஐஸ் ஸ்கேட்டிங்,  நடன அசைவுகள் உலகப் பிரசித்தி பெற்றவை.


 2014ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் ஸ்கேட்டிங்கில் மிட்ச்செல் இஸ்லாம் உடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றது உலகம் முழுவதும் இவருக்கு  ரசிகர்கள் உருவாகினர். இவரை பின் தொடர்ந்து தான்   கனடாவில் பல பெண்கள்    ஐஸ் ஸ்கேட்டிங்கில் ஆர்வமாக கலந்து கொண்டனர். அலெக்ஸாண்ட்ரா பால் தான் இவர்களுக்கு முன்னோடி என்பதில் ஐயமில்லை.   2016ல் தனது ஓய்வை அறிவித்த அலெக்சாண்ட்ரா அதன் பிறகும்  கனடா விளையாட்டு போட்டிகளில் முக்கிய பங்காற்றி வந்தார்.

அலெக்சாண்ட்ரா பால்

 இந்நிலையில் கனடாவின் ஒன்டாரியோவில் நிகழ்ந்த மோசமான கார் விபத்தில் செவ்வாய்க்கிழமை அலெக்ஸாண்ட்ரா படுகாயம் அடைந்தார்.   கட்டுப்பாட்டை இழந்த டிரக் ஒன்று அடுத்தடுத்து 7 கார்கள் மீது மோதியதில் அலெக்ஸ்ண்ட்ரா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தன்னுடைய  மகனின் உடல் நலக்குறைவு காரணமாக   மருத்துவனைக்கு அலெக்ஸாண்ட்ரா காரில் விரைந்த போது இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  விபத்தில் படுகாயமடைந்த அலெக்ஸாண்ட்ரா பின்னர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். அவரது மரணத்துக்கு கனடா மற்றும் சர்வதேச ஐஸ் ஸ்கேட்டிங் கூட்டமைப்புகள், , சக வீரர்கள் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web