தீபாவளி பயணத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்... அமைச்சர் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு திரள்வதால், ஆம்னி பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக சில நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: “மொத்தம் 10 நிறுவனங்களே தற்போது கூடுதல் கட்டணங்களை நிர்ணயித்துள்ளன. அவர்களுக்கு கட்டணத்தை உடனடியாக குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை பின்பற்றாமல் மீறினால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

மேலும், தீபாவளி பயணங்களில் மக்கள் சிரமப்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்கிறது என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் நேரடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
