ஒரு புறம் உறைபனி... மறுபுறம் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை... பொதுமக்கள் கடும் அவதி... !

 
vஅறவறண்ட வானிலை

தமிழகம்,   புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும்,  நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் ஏற்படலாம்.   ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

வெயில்
இன்றும், நாளையும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக  31-32 டிகிரி செல்சியசும்    குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.  மீனவர்களுக்கான எச்சரிக்கை: எதுவும் இல்லை.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web