சீமான் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ்!! பரபரக்கும் திரைத்துறை வட்டாரங்கள்!!

 
சீமான் விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னோடு கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு   திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி 7 முறை சீமான் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  

சீமான்

அத்துடன் திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார்.  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு புகார் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் தன் மீதான் குற்றச்சாட்டுக்களை சீமான் மறுத்துள்ளார். விஜயலட்சுமி  தன் மீது கூறியது போலவே 6 பேர் மீது  புகார் அளித்துள்ளார் .  இதனையடுத்து   நாம் தமிழர் கட்சியினர் பலரும் விஜயலட்சுமி மற்றும்  தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மீதும் புகார் அளித்துள்ளனர்.  

சீமான்


இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னைப்பற்றி பாலியல் புகார் கூறி பொது வெளியில் அவதூறாக பேசி வரும் விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்   சீமான் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web